காஷ்மீர் விவகாரம்: இந்தியாவின் சில விமானங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்!

0

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததால், இந்திய பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்வழிகளில் பறக்கத் தடை விதித்து அறிவித்தது பாகிஸ்தான்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்தது.

மேலும், இந்திய பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்வழிகளில் சிலவற்றை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.