காஸா:இஸ்ரேலின் தடையால் அதிகரிக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம்!

0

காஸா:ஃபலஸ்தீன் காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள அநியாயமான தடையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த துயரத்தை அனுபவிப்பதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.உலக புற்றுநோய் தினத்தையொட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

2009-2014 காலக்கட்டத்தில் காஸாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7069.2014-ஆம் ஆண்டு மட்டும் 1502 பேருக்கு புற்றுநோய் பாதித்துள்ளது.காஸாவின் மீது தொடரும் இஸ்ரேலின் அநியாய தடையும், எல்லைகளை மூடியதும், சிகிட்சைக்கான வசதிகள் குறைவாக இருப்பதும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பதும் மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.மருந்துகள், சிகிட்சை வசதிகளை அளித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுமாறு சர்வதேச சுகாதார அமைப்புகள் மற்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு காஸா சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.நோயாளிகள் சிகிட்சைக்காக வெளியே செல்வதற்கு எகிப்து-காஸா இடையேயான ரஃபா எல்லையை திறக்கவேண்டும் என்றும் அமைச்சகம் கோரியுள்ளது.

Comments are closed.