காஸ்கஞ் பகுதியில் முஸ்லிம்களின் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சங்கி கும்பல்: காவல்துறையிடம் சிக்கிய வீடியோ

0

உத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் தேசிய கொடி ஏந்தி குடியரசு தினத்தில் ஊர்வலம் சென்ற விஹச்பி மற்றும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் பரப்பட்டது. சில முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களும் கூட இந்த செய்திகளை பரப்பினர். இந்நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி கொடி ஏற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது காவிக்கும்பல் தாக்குதல் நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

காஸ்கஞ் பகுதியில் உள்ள வீர் அப்துல் ஹமீது சவுக் சந்திப்பில் காலை 9:52 மணியளவில் நடைபெற்ற குடியரசு கொண்டாட்டத்தின் போது அப்பகுதியின் குறுகலான சாலைவழியாக சுமார் 60-70 இரு சக்கர வாகங்களில் வந்த 200க்கும் மேற்பட்ட சங்க பரிவார கும்பல் அப்பகுதி மக்களின் கொண்டாட்டங்களை தடுத்துள்ளது. அப்பகுதி முஸ்லிம்கள் இந்த கும்பலை சேர்ந்தவர்களை தங்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு அழைத்த போதிலும் அதனை மறுத்து அவர்கள் மீது இக்கும்பல் தாக்குதல் நடத்தியது வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பத்திரிக்கை ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் முக்கிய சாலை வழியாக செல்லும் இவர்கள் இவ்வருடம் எப்போதும் இல்லாத வழக்கமாக இந்த குறுகலான தெருக்கள் வழியாக சென்றனர். இது போன்ற ஒரு சிறிய பாதையில் இவ்வளவு பெரிய கும்பல் நுழைந்ததை நான் இதுவரை என் வாழ்நாளில் கண்டதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்த வீடியோ காட்சி தற்போது காவல்துறையிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இந்த வீடியோவை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர்கள் கையில் கத்தி, வாட்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதும் வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த மோதலின் போது இந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது குறித்து இந்த வீடியோக்கள் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.