கிட்டப்பா கொலை வழக்கு – உதவி கமிஷனர் உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு

0

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கரிசூழ்ந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் கிட்டப்பா. இரட்டை கொலை வழக்கு உட்பட 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவரை தேடி வந்த காவல்துறையினர் கடந்த வருடம் (2015) ஜூன் மாதம் இவரை என்கௌண்டரில் சுட்டுக் கொன்றனர். இவரை காவல்துறையினர் பிடித்து வைத்து கொலை செய்துவிட்டதாக கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீர் அஹமது இவரின் கொலை தொடர்பாக உதவி கமிஷனர் உள்ளிட்ட 12 பேர் மீது CBCID போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாளையம்கோட்டை உதவி கமிஷனர் மாதவன், எஸ்.ஐ. சிவராமகிருஷ்ணன் உட்பட 10 போலீசார் மீதும் செல்வம் என்ற செலவனாதன், ராஜாராம் ஆகிய இரு கிட்டப்பாவின் நண்பர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிட்டப்பா வழக்கு தொடர்பாக மேலும் படிக்க: கிட்டப்பா

Comments are closed.