கிரிக்கெட்டை தாக்குதலுடன் ஒப்பிட்ட அமித்ஷா: பாகிஸ்தான் மீது மீண்டும் வெற்றிகரமாக தாக்குதல் என கருத்து!

0

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியா v பாகிஸ்தான் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து 7-வது முறையாக வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதை தாக்குதல் நடத்தி வெற்றிபெற்றது போல ஒப்பிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா.

டிவிட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது: “பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல், முடிவு வழக்கம்போலவே. சிறப்பாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை கொள்வதோடு,  இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்” என அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

Comments are closed.