கிரிக்கெட் வீரர் மரணம்

0

மேற்கு வங்க அணியின் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோர் அணியின் முன்னாள் கேப்டன் அன்கிட் கேசரி இன்று மரணம் அடைந்தார். ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது ஒரு கேட்சை பிடிக்க முற்பட்ட போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் அன்கிட் மயக்கமுற்றார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கால் மரணம் அடைந்தார்.
ஏப்ரல் 17 போட்டியில் விளையாடும் 11 வீரர்களில் இல்லாத கேசரி, மற்றொரு வீரருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்ய களம் இறங்கினார். அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது.
20 வயதான கேசரியின் மரணம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.