கிரிஷ் கர்னாட்: சமரசமில்லாத போராளி! 1938-2019

0

கிரிஷ் கர்னாட்: சமரசமில்லாத போராளி! 1938-2019

நானும் அர்பன்(நகர்ப்புற) நக்ஸல்தான்” என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு கவுரி லங்கேஷின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட கிரிஷ் கர்னாட்டின் முகத்தை யாரும் மறக்க முடியாது. மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி காவல்துறை கைது செய்த அடுத்த வாரம் (செப்டம்பர் 5, 2018) பெங்களூரில் நடந்த கவுரி லங்கேஷின் நினைவு தினத்தில்தான் கர்னாட் தனது எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்தார். “மீ டூ அர்பன் நக்ஸல்” என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த கிரிஷ் கர்னாட் நாட்டில் பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இயங்குபவர்களை அர்பன் நக்ஸல் என்ற பெயரில் முத்திரை குத்தி சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக களத்தில் நின்றவர். இந்துத்துவ பாசிஸ்டுகளின் மிரட்டலுக்கு அஞ்சாத உறுதி; அதுதான் இதர கலைஞர்களிடமிருந்து கிரிஷ் கர்னாட்டை வித்தியாசப்படுத்தியது. அவரது நாடகங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக எப்போதும் மக்களோடு உரையாடியது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply