கிழக்கில் சாயும் தாமரை!

0

கிழக்கில் சாயும் தாமரை!
ரியாஸ்

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெறாது, அது தோல்வியை தழுவும் என்று பலரும் ஆரூடம் கூறி வருகின்றனர். பா.ஜ.க.வின் மக்கள் விரோத கொள்கைகள், அதிருப்தியடைந்து கூட்டணியை விட்டும் வெளியேறும் கட்சிகள், வெறுப்பு அரசியலிடம் மக்கள் கொண்டுள்ள வெறுப்பு, நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. பெற்று வரும் தோல்விகள் என பல விஷயங்களை மேற்கோள்காட்டி பா.ஜ.க. தோல்வியடையும் என்று கூறுகின்றனர். இவை தவிர, எண்ணிக்கை சார்ந்து இவர்கள் கூறும் கருத்துகளும் இவர்களின் வாதங்களுக்கு வலு சேர்க்கின்றன.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. 71 இடங்களில் வெற்றி பெற்றது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகள், ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகள், உத்தர்காண்டின் ஐந்து தொகுதிகள், டெல்லியின் ஏழு தொகுதிகள் மற்றும் இமாசல பிரதேசத்தின் 4 தொகுதிகள் என அனைத்தையும் பா.ஜ.க. தன் வசப்படுத்தியது. இது தவிர மத்திய பிரதேசின் 29 தொகுதிகளில் 27 தொகுதிகளையும் ஜார்கண்டின் 14 தொகுதிகளில் 12 தொகுதிகளையும் சட்டீஸ்கரின் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் ஹரியானாவின் 10 தொகுதிகளில் 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. அதாவது 207 தொகுதிகளில் 190 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. தற்போதுள்ள சூழலில் இந்த வெற்றியை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாத சூழலில் பா.ஜ.க. இருப்பதால் அதில் பகுதியளவு தொகுதிகளை இழந்தாலும் அது அக்கட்சியின் பெரும்பான்மையை பாதிக்கும் என்பது இவர்களின் வாதம்.

இதில் ஓரளவு நியாயம் இருந்தாலும் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வலிமையை எதிர்கட்சிகள், குறிப்பாக பிரதான தேசிய எதிர்கட்சியான காங்கிரஸ் கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு இதுவரை நம்பிக்கையளிக்கும் பதில் இல்லை. மேலும் இந்த கணிப்பை பா.ஜ.க.வும் மேற்கொண்டு இதனை சரி செய்யும் வாய்ப்புகளையும் அக்கட்சி அலசி ஆராய ஆரம்பித்துள்ளது. தேர்தலில் தோற்றாலும் ஆட்சி அமைக்கும் கலையை கற்றுள்ள பாரதிய ஜனதா அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்த எல்லையும் தாண்டும் என்பதை எதிர்கட்சிகள் உணர்ந்து கொள்வது நல்லது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.