கீழடி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்!

0

கீழடி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்!

மானுட சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் மகத்தான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தனை நாகரிகங்களுக்கும் பின்னால்  நதிகளே ஆதாரமாக அமைந்துள்ளன. சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வட இந்தியாவில் சிந்து நதியினை ஆதாரமாக  வைத்து ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற நகரங்கள் கண்டறியப்பட்டபோது இந்தியாவின் தொன்மை இவ் உலகத்திற்கு தெரியவந்தது. ஆனால் இந்தியாவிலேயே மிகச் செழுமையான சங்க இலக்கியங்களையும், தனித்துவமான பண்டபாட்டையும் கொண்ட தமிழ்சமுகத்தின் தொன்மையை அறிவியல் பூர்வமாக முழுமையாக நிரூபிக்க முடியாமல் இருந்த நிலையில்தான் இன்று இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் ஓர் மாபெரும் திருப்புமுனையாகவும் ஓர் பேசு பொருளாகவும் கண்டறியப்பட்டுள்ள இடம் கீழடி. அறிஞர் அண்ணா முதல் வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஸ்மித் வரை இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படவேண்டும் என்று சொல்லி வந்த நிலையில் கீழடி அதற்கான அழுத்தமான துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.