குஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து!

0

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ஜலீலா கிராம ஊராட்சி துணைத் தலைவரான மஞ்சி சோலங்கி (தலித்) கடந்த வாரம் கொல்லப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் மூன்று பேர் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 116 தலித்துகள் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக தகவலை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் தொடர்பாக “கட்ச் மாவட்டத்தில் 116 தலித்துகள் கொல்லப்படும் அபாயத்தில் உள்ளனர். அவர்களின் உரிமை நிலத்தில் பயிரிட முயற்சித்ததற்காக அவர்களை ஆதிக்க சாதியினர் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்” என ஜிக்னேஷ் மேவானி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து குஜராத் மாநில அரசிடமிருந்து போதுமான பாதுகாப்பை வேண்டுவாதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.