குஜராத்தில் இறந்த பசுவின் உடலை அகற்ற மறுத்ததால் தலித் சிறுவன் மீது தாக்குதல்

0

குஜராத் மாநிலம், தாஸ்க்ரோய் தாலுக்காவில் உள்ள பாவ்தா கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் பர்மார். இவரை அக்கிராமத்தை சேர்ந்த இருவர் இறந்த பசுவின் உடலை அகற்ற கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரது 15 வயது மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தன் மகன் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையிடம் தினேஷ் புகாரளித்துள்ளார். அதில், 10 வது படிக்கும் தன் மகன் ஹர்ஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில், சாஹில் தாகொரே மற்றும் சர்வர்கான் பதான் ஆகியோர் அங்கு சென்று ஹர்ஷை துன்புறுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

“இறந்த விலங்குகளின் உடலை அகற்றுவது எங்களது பரம்பரை தொழில். ஆனால் உணா சம்பவத்திற்குப் பிறகு நான் அதை செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். நான் தற்பொழுது எனது வாழ்வாதாரத்திற்காக தினக் கூலி வேலைகளை நம்பியுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.
இது குறித்து கண்பா காவல்துறை அதிகாரி கோவிந்த்பாய் பர்மார் கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மேல் SC/ST கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இத்தாக்குதலில் காயமடைந்த ஹர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.