குஜராத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்த அமித்ஷா

0

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்ற வந்த பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு படேல் இன மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கவுரவ யாத்திரை யை தொடங்கி வைக்க குஜராத் சென்ற அமித்ஷாவை பேச விடாமல் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரவித்துள்ளனர். கூட்டத்தில் இருந்த கோபமுற்ற படேல் இளைஞர்கள் அமித்ஷாவின் உரைக்கு இடையூறு செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த படேல் இனத் தலைவர் ஹார்டிக் படேல், பாஜகவின் இந்த கவுரவ யாத்திரை, மகாபாரத வில்லன்களான கவுரவர்களின் யாத்திரை என்றும் அந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்றும் கூட்டம் நடக்கும் இடம் காலியாக காணப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் வர இருக்கின்ற குஜராத் தேர்தலில் பாஜக காங்கிரசோடு மோதவில்லை என்றும் குஜராத் மக்களுடன் தான் மோதுகின்றது என்றும் அவர் கூறியுள்ளர்.

இது குறித்து கூறிய அவர், “இவ்வருட தேத்தலில் பாஜக காங்கிரசுடன் மோதவில்லை, குஜராத் மக்களுடன் மோதுகிறது. அதனால் தான் பாஜக விற்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

கடைந்த வருடம் செப்டெம்பர் மாதம் குஜராத்தின் சூரத் நகரில் அமித்ஷா பங்குபெற்ற கூட்டத்தில் படேல் இன மக்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  நாற்காலிகளை உடைத்த படேல் சமூகத்தினர் ஹார்டிக் படேல் ஆதரவு கோஷங்களையும், அமித்ஷாவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

கடந்த வாரம் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் படேல் இன மக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அவரை ஊடகங்களுடன் பேச விடாமல் செய்தனர். கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் கவுன்சிலர் நிதின் படேல் பங்கு பெற்ற நிகழ்ச்சி மேடையில் வளையல்களை வீசி எறிந்தார்.

வருகிற டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பாஜக முன்னர் விளம்பரம் செய்த வளர்ச்சியை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது பாஜக விற்கு தற்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.