குஜராத்தில் கலவராமாக மாறிய மாணவர் மோதல்: ஒருவர் கொலை

0

குஜராத்தில் கலவராமாக மாறிய மாணவர் மோதல்: ஒருவர் கொலை

குஜராத்தில் இரு சமூக மாணவர்களக்கு இடையேயான மோதல் கவலரமாக மாறியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பத்து வீடுகள் மற்றும் 20 வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெஹ்சானா பகுதியில் உள்ள வத்வாளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் பத்து முறை சுட்டும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கல்வீச்சில் ஈடுபட்ட கலவர கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் இங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில ரிசர்வ் போலிஸின் மூன்று படைகள் காந்திநகரில் இருந்து இங்கு வரவளைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வத்வாளி கிராமத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றதாக காவல்துறை கூறியுள்ளது. கலவரக்காரர்கள் சுமார் 10 வீடுகளை எரித்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மெஹ்சானா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 45 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 நபர்கள் மீது கொலை வழக்கு உட்பட இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 147, 148, 149, 395, 397, 435 மற்றும் 436 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கு தவிர்த்து மீதம் உள்ள பிரிவுகளில் இன்னும் 14 பேர் மெது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.