குஜராத்தில் கோட்சை பிறந்தநாளை கொண்டாடிய இந்து அமைப்பினர் கைது

0

மகாத்மா காந்தி,  நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த சம்பவம். இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் லிம்பியாயத் பகுதியில் உள்ள சூரியமுகி அனுமன் கோவிலில் இந்து மகா சபையை சேர்ந்த சிலர் கோட்சே பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

அதன்பின் அவர்கள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் அளித்தும், கோவிலில் பஜனை பாடல்களை படித்தும் உள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்று 6 பேரை கைது செய்தனர்.

Comments are closed.