குஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித்

0

குஜராத்தில் திருட்டு குற்றம் சுமத்தி அடித்துக் கொல்லப்பட்ட தலித்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சிலர் கட்டி வைத்து தாக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை அடித்து கொலை செய்த நபர்களை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர்களால் கொலை செய்யப்பட்ட நபர் 35 வயதான முகேஷ் வானியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் ராதாதியா இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை அருகே குப்பைகளை பொறுக்கிய இவரை திருடன் என்று சந்தேகித்து அத்தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்டவரின் மனைவியான ஜயாபென் வானியா, சஹபர் வெரவள் காவல் நிலையத்தில், தனது கணவரை ஐந்து நபர்கள் கட்டி வைத்து தாக்கியதாகவும் அதில் யஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் புகாரளித்துள்ளார்.

இது குறித்து ராஜ்கோட் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சுருதி எஸ் மேதா கருத்து தெரிவிக்கையில், “குப்பை பொறுக்கும் முகேஷை ராதாதியா இண்டஸ்ட்ரீஸ் அருகே வைத்து சிலர் தாக்கியுள்ளனர். இவரும் இவரது மனைவியும் திருடியதாக அந்த தொழிற்சாலை உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.” என்று தெரிவிதுள்ளார்.

ஜயாபென் வானியா அளித்த புகாரை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பான வீடியோவின் அடிப்படையில், இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான முகேஷ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 302 மட்டும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ராதாதியா நிறுவன உரிமையாளர் ஜெய்ஸுக் ராதாதியா மற்றும் அவரது நண்பர்களான சீராக் பட்டேல், திவ்யெஷ் பட்டேல், மற்றும் தேஜஸ் சாலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.