குஜராத்தில் பா.ஜ.க அலுவலகம் சூறை

0

காவல் துறை துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததால் குஜராத்தின் மெஹ்சானா பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை அங்குள்ள மக்கள் தாக்கி சூறையாடினர்.

மயூர் படேல் என்பவர் குஜராத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடத்தப்பட்ட படேல்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற போராட்த்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது போராட்ட கார்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலினால் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 22 வயதான மயூர் படேல் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜ.க மீது கோபமுற்ற மக்கள் பா.ஜ.க. அலுவலகத்தின் மீது கல் வீசியும் , அலுவலக கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர். அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மயூர் படேலின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் அந்த பகுதிக்குள் நுழைய முடியாது என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Comments are closed.