குஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை

0

குஜராத்தில் காட்டாச்சி நடைபெறுகிறது என்று மஹிதி அதிகர் குஜராத் பஹேல் (MAGP – Gujarat Initiative for Right to Information, மற்றும் People’s Union of Civil Liberties(PUCL) ஆகிய அமைப்புகள்  குற்றம் சுமத்தி உள்ளன. குஜராத் மாநிலம், தகவல் அறியும் உரிமை சட்ட போராளிகளின் கொலையில் முதல் இடத்திலும் அரசாங்க முறைகேடுகளை உலகிற்கு தெரியபடுத்துபவர்களின் கொலைகளில் மூன்றாம் இடத்திலும் இருப்பது \தான் இவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு காரணம்.

ஊடகங்களுக்கு அறிக்கை சமர்பிக்கும் போது MAGP பிரதிநிதி பங்க்தி ஜாக் இதனை தெரிவித்தார். அவர், ” 2005 இல் இருந்து இன்று வரை 12 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொலப்பட்டுள்ளனர் என்று கூறினார். இவரது இந்த அறிக்கை புது டில்லியை மையமாக கொண்ட மனித உரிமைக்கான ஆசிய மையம் தயாரித்த அறிக்கையை சார்ந்து இருந்தது.
இந்த கொடுமைகளுக்கு கடைசியாய் பலியானவர் கரன்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த 55 வயது ரடன்சிங் சவுத்ரி என்பராவார். இவர் அவர் கிராமத்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உதவிகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று போராடியதனால் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை பற்றி ஜாக் கூறுகையில், அக்டோபர் 7 ஆம் தேதி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களில் முறைகேடு இருப்பதாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவருமாறும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். மேலும் வெள்ள நிவாரணங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதி பாதிக்கபட்டவர்களின் வங்கி கணக்கு குறியிட்ட காசோலைகளாக கொடுக்கப்படாமல் அந்த காசோலையை வைத்திருப்பவர் யார் வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தி பணம் பெறும்வகையில் கொடுத்ததால் கிராம நிர்வாகிகள் நிவாரண நிதியில் பத்து சதவிகிதத்தை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியை மக்களுக்கு கொடுப்பதாகவும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அதிகமான நிதியையும் மற்றவர்களுக்கு குறைவாகவும் கொடுத்து வருவதாகும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அக்டோபர் 12 தேதியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலறிய விண்ணப்பித்துள்ளார். ஆனால் மாவட்ட அதிகாரிகள் அவர் கேட்கும் தகவல்களை அவருக்கு தராமல் அவரது விண்ணப்பத்தை கிராம நிர்வாகிகளுக்கு மாற்றி விட்டுள்ளனர். இதன் விளைவாக அக்டோபர் 17 காலை 6:30 மணி அளவில் அவரது தோப்பில் இருந்து வீடு திரும்பும்போது அவரை வழிமறித்து அடித்துக் கொன்றுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் தகவல் அறியும் உரிமை போராளிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவரை போல கொல்லப்பட்டவர்கள் அமித் ஜெத்வா, நதீம் சையத், விஷ்ராம் டோடியா, ஜபர்த்தன் காத்வி, அமித் கபாசியா, ஷைலேஷ் படேல், ராயாபாய் கோஹில், கேதன் சோளங்கி, புருஷோத்தம் சவ்ஹான் , ஜயேஷ் பாராட், யோகேஷ் சேகர் என்று பட்டியல் நீளுகிறது.

கடந்த 2005 இல் இருந்து 2012 வரை கிட்டத்தட்ட 91 காவல்நிலைய மரணங்கள் நிகழ்துள்ளன என்று PUCL அமைப்பு கூறுகிறது. காவல்நிலைய மரணங்கள் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது. 159 காவல் நிலைய மரணங்களை நிகழ்த்தி மகாராஷ்டிரா முதல் இடத்திலும் 122 காவல் நிலைய மரணங்களை நிகழ்த்தி உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இந்த தகவல்கள் தேசிய மனித உரிமை அமைப்பிடம் இருந்து பெறப்பட்டதாகும்.
இந்த காவல்நிலைய மரங்களுக்கு கடைசியாக பலியானவர் ஷ்வேதாங் படேல். 2013 இல் மட்டுமே குஜராத்தில் 965 வழக்குகள் காவல் துறைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 276 வழக்குகளில் மட்டுமே விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த 276 இல் வெறும் 180 இல் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Comments are closed.