குஜராத் அதானி மருத்துவமனையில் ஐந்து மாதங்களில் 111 குழந்தைகள் பலி

0

குஜராத் அதானி மருத்துவமனையில் ஐந்து மாதங்களில் 111 குழந்தைகள் பலி

குஜராத்தில் அதானி கல்வி மட்டும் ஆய்வு நிறுவனம் நடத்திவரும் மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை G.K.பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் பிறப்பிற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் என மொத்தம் 777 குழந்தைகளில் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழந்தைகளின் பலி எண்ணிக்கை கணக்கின் படி இந்த மருத்துவமனையின் குழந்தைகள் இறப்பு விகிதம் 14% ஆக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

குழந்தைகள் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம், கால தாமதமாக குழந்தைகளை அனுமதித்தல், போதிய ஊட்டச்சத்தின்மை என்று பல காரணங்களை குறிப்பிட்ட போதிலும் குஜராத் அரசு இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து குஜராத் சுகாதாரத்துறை ஆணையர் ஜெயந்தி ரவி, “இந்த மரணங்களின் பின்னனியில் உள்ள காரணங்கள் குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழு தங்களது அறிக்கையை சமர்பித்ததும் தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்கள் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் G.S.ராவ் பகிர்ந்துகொண்ட தகவல்களின் படி, இந்த மருத்துவமனையில் கடந்த 2017 இல் மட்டும் 258 குழந்தைகள் உயிரிழந்துள்ளது என்றும் இந்த பலி எண்ணிக்கை 2016 இல் 184 ஆகவும் 2015 இல் 164 ஆகவும் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “மருத்துவமனை அனுமதியின் ஒப்பீட்டில் இந்த மரணங்களின் விகிதாச்சாரம் 2015 இல் 19% ஆகவும் 2016 இல் 18% ஆகவும் 2017 இல் 21% ஆகவும் உள்ளது. இவ்வருடம் மே மாதம் வரையில் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,”குழந்திகள் இறப்பு விகிதம் சென்ற வருடங்களை விட குறைவாக 14% ஆகத்தான் உள்ளது. மேலும் நாங்கள் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளினால் இது இவ்வருட இறுதியில் குறைவாகவே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இவரை பொறுத்தவரை இந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதில் தாமதமாவதே மரணங்களுக்கு காரணம். மேலும் குச் மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் இருந்து இங்கு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு மரணங்கள் ஏற்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். ஐஇது குறித்து அவர் கூறுகையில் ”இந்த மரணங்களின் ஒரு காரணம் குறைப் பிரசவம். மற்றொரு காரணம் கருவுற்றிருத்தலின் போது போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவினை தாய் உட்கொள்ளாதது. மற்றும் தாமதமான அனுமதி இந்த உயிரிழப்புகளுக்கு மற்றுமொரு காரணம்.” என்று ராவ் தெரிவித்துள்ளார்.

“250 கிலோமீட்டர் தாண்டி ஒரு குடும்பம் இங்கு வருகிறதென்றால் அதில் ஏற்ப்படும் காலதாமதம் குழந்தை உயிர்பிழைக்கும் வாய்ப்பை நேரடியாக பாதிக்கின்றது. இந்த பிரச்சனைகள் குறித்து எங்களது ஊழியர்கள் தங்களுக்குள்ளே கலந்தாலோசனை செய்து இந்த உயிரிழப்புகளை குறைப்பதற்காக முயற்சிக்கின்றோம்.” என்று ராவ் கூறியுள்ளார்.

Comments are closed.