குஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்

0

குஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்

அஸ்ஸாமிய பாடநூல் ஒன்றில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 2002 குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடி தலைமையிலான மாநில பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அந்நூலின் ஆசிரியர் மூன்று பேர் மற்றும் அந்த நூலின் பதிப்பாளர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலில் உள்ள கருத்தால் கோபமடைந்த செளமித்ரா கோஸ்வாமி மற்றும் மனப் ஜோதி போரா ஆகியோர், இந்த பாடம் வளரும் மாணவர்களை பெரிதும் அறியப்படும் பிரதமர் மீது தவறான எண்ணம் கொள்ளச் செய்து வழிகெடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தில் உள்ள “சமீபத்திய பிரச்சனைகள் மற்றும் சவால்கள்” (Recent issues and Challenges) என்ற அத்தியாயத்தில் வரும் ஒரு வரி தான் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய காரணமாக உள்ளது. இதில் குஜராத் கலவரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. முதன் முதலில் 2006 இல் பதிப்பு செய்யப்பட்ட இந்த அத்தியாயத்தில், “ரயில் எரிப்பு சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 57 நபர்கள் உயிரிழந்தனர். மறுநாள் இந்த சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் தான் உள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குஜராத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை ஒரு மாத காலத்திற்கு நீண்டது. இதில் ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இந்த வன்முறையின் போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தது. இன்னும் கூடுதலாக இந்த தாக்குதலில் ஈடுபட்ட இந்துக்களுக்கு மாநில நிர்வாகம் உதவியது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டெம்பர் 15 ஆம் தேதி கொலகாட் காவல்நிலையத்திற்கு கடிதம் மூலம் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. கோஸ்வாமி மற்றும் போரா ஆகிய இருவர் அளித்த புகாரிலும் மோடியை மோசமாக சித்திரிக்கும் வரி இந்த பாடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2011 செப்டெம்பர் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கிய சிறப்பு புலனாய்வுதுறை மோடி குற்றமற்றவர் என்று தெரிவித்துள்ளது என்றும் தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புத்தகம் இளம் மாணவர்களை வழிகெடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதம் அனுப்பப்பட்ட மறுநாள் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்த பதிப்பாளர் கவ்ஹாதியை மையமாக கொண்டு இயங்குவதால் இவ்வழக்கு விரைவில் கவ்காத்திக்கு மாற்றப்படும் என்று கொலாகாத் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே விரோத்தத்தை தூண்டுவது – பிரிவு 53(a), 505 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த புத்தக ஆசிரியர்களில் ஒருவர், தங்களுக்கு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தாங்கள் அப்புத்தகத்தை NCERT இன் பரிந்துரைப்படியே தயார் செய்துள்ளதாகவும், அந்தப்புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் தான் என்றும் இதே போன்ற தகவல்கள் இன்னும் பல புத்தகங்களில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

2011 ஆண்டில் இருந்து சுற்றில் இருக்கும் இந்த புத்தகம் கவ்காத்தியை மையமாகக் கொண்ட அஸ்ஸாம் புக் டிப்பாட்டின் பதிப்பாகும்.இந்த புத்தகம் கல்வி ஆராய்ச்சியின் தேசிய கவுன்சில் (National Council of Educational Research) மற்றும் அஸ்ஸாம் உயர் கல்வி கவுன்சில் (Assam Higher Secondary Educational Council) ஆகியவற்றின் பரிந்துரைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டது. இந்த புத்தகத்தை எழுதிய மூன்று ஆசிரியர்களான துர்காகந்தா சர்மா, ரபிக் சமான் மற்றும் மனஸ் ப்ரதிம் ஆகியோர் அஸ்ஸாமில் பெரிதும் அறியப்பட்டவர்கள். இதில் துர்ககந்தா சர்மா கோல்பாராவில் உள்ள கோல்பாரா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். மனஸ் ப்ரதிம் DK கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் துறைத் தலைவாராக பணியாற்றி வருகிறார்.

 

Comments are closed.