குஜராத் கலவரத்தில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை மாநில அரசு செலவில் கட்டித் தரும் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து

0

2002 குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான உயிர்சேதமும், பல நூறு கோடி ரூபாய் பொருட்சேதமும் ஏற்பட்டது. மேலும் இந்த கலவரத்தின் போது இஸ்லாமிய சமுதாய மக்களின் வழிபாட்டுத்தளங்கள் திட்டமிட்டு தகர்கப்பட்டன.

இந்த கலவரத்தில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்களை அரசு செலவில் சரி செய்து தர வேண்டும் என்று குஜராத் உயர்நீதின்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு வழக்கு தொடர விண்ணப்பித்தது. இந்த வலக்கை தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் நீதிபதி PC.பாண்டே அடங்கிய பெஞ்ச் அனுமதித்தது.

இவ்வழக்கில் குஜராத் அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேதா, தங்களது மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் குஜராத் அரசு இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக தாங்களாக முன்வந்து தார்மீகமான உதவிகளை செய்யுமே அல்லாது எந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலும் உதவிகள் செய்யாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.