குஜராத் கலவரப் புகழ் மாயா கோட்னானி தரப்பு சாட்சியாக ஆஜர் ஆக இருக்கும் அமித் ஷா

0

2002 குஜராத் கலவரம், நரோடா காம் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட மாயா கோட்னானி தரப்பு சாட்சியங்களாக பாஜக வின் அமித் ஷா உட்பட 14 பேரை அழைக்க இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து சிறப்பு நீதிபதி பிரணவ் பி. தேசாய் தனது உத்தரவில், “இந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு வழக்கு விசாரணையின் பொருத்தமான தருணத்தில் சாட்சியங்களுக்கான சம்மன் அனுப்பப் பட வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும் மாயா கோட்னானியின் இந்த விண்ணப்பத்திற்கு SIT தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“(அவரது விண்ணப்பத்திற்கு) எதிர்ப்புகள் இல்லாததாலும், குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை கருத்தில் கொண்டும் இவரது இந்த கோரிக்கை நியாயமற்றது என்றோ அர்த்தமற்றது என்றோ கூற முடியாது. வாதத் தரப்பு அவரின் விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திராத நிலையில் இந்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட வேண்டும்.” என்று நீதிபதி தேசாய் கூறியுள்ளார்.

மாயா கோட்னானி, தனது தரப்பு சாட்சியங்களாக அமித்ஷா உள்ளிட்ட 14 பேரை அழைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் கலவரம் நடந்த 2002 பிப்ரவரி 28 ஆம் தேதி தான் குஜராத் சட்டமன்றத்தில் இருந்தாகவும் கலவரம் நடைபெற்ற இடத்தில் இல்லை என்பதை நிரூபிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டை வழங்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின் படி இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து பிணையில் உள்ளார்.

Comments are closed.