குஜராத் கலவரவத்தில் மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை

0

குஜராத் கலவரவத்தில் மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை

2002 குஜராத் கலவர வழக்கில் மோடி மற்றும் பிற அரசியல்வாதிகள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஜாக்கியா ஜாஃபரி தொடர்ந்த வழக்கு வருகிற நவம்பர் 19 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

குஜராத் கலவர வழக்கில் மோடி உட்பட 59 நபர்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறி அவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுத்துறை குறிபிட்டதை மேற்கோள் காட்டி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு இந்த அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் (குஜராத் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரியின் மனைவி) ஜாக்கியா ஜாஃபரி மற்றும் தீஸ்டா செடெல்வாத்தின் சிட்டிசன்ஸ் ஃபார் பீஸ் இணைந்து மேல் முறையீடு செய்யப்பட்ட போது உயர் நீதிமன்றமும் அந்த தீர்ப்பை 2017 இல் உறுதி செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜாக்கியா ஜாஃபரி உச்ச நீதியமன்றத்தில் மனு அளித்துள்ளார். இவரது மனு மீதான விசாரணை இம்மாதம் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது.

குஜராத் கோத்ரா ரயில் எரிந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் அகமதாபாத்தில் உள்ள குல்பெர்க் சொஸைட்டியில் இந்துத்வ கும்பலால் கலவரம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஜாஃபரி உட்பட 69 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த கலவரத்தில் மோடி மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளதாக அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஜாக்கியா ஜாஃபரி கேட்டுக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டில் குஜராத் கலவரம் தொடர்பாக ஒன்பது வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று குஜராத் மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஒன்பது வழக்குகளில் குல்பெர்க் சொசைடி வழக்கும் ஒன்று. பின்னர் 2009 ஆம் ஆண்டில் சிறப்பு புலனாய்வுத்துறை இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுத்துறை 2012-ல் இவ்வவழக்கில் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.

Comments are closed.