குஜராத் கலவர ஆவணப்பட இயக்குனரின் பக்கத்தை முடக்கிய யுடியூப்

0

2004 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனவெறி கலவரங்களை பற்றிய ஆவணப்படம் வெளியிட்ட ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா அவர்களின் யுடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இவரது இந்த பக்கத்தில் சுமார் 20- 25 வீடியோக்களே இருந்தன. இந்த வீடியோக்கள் 2002 கலவரங்களுக்காக அப்போது ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை ஷர்மாவின் “Rakesh Films” என்கிற யுடியூப் பக்கம் முடக்கப்பட்டதர்கான அறிவிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், அவரது பக்கம், தேவையற்ற வீடியோக்கள்(Spam) மீதான நடவடிக்கை, ஏமாற்று வேலைகள், மற்றும் பார்வையாளர்களை தவறாக வழி நடத்தும் வீடியோக்கள் இருப்பதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சரியாக இயங்கி வந்த தனது பக்கம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வாறு முடக்கப்பட்டது எப்படி என்றும், தான் இது குறித்து யுடியூப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார், மேலும் தனது பக்கத்தில் ஆட்சபனைகுரிய விஷயங்கள் எதுவும் இருந்திருந்தால் அவர்கள் தன்னை முதலில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் ஏன்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையால் தான் அதிர்ச்சியடையவில்லை என்றும் 2004 இல் தனது படம் வெளியானதில் இருந்தே அதனை மக்களிடம் சென்று சேர்வதை தடுக்க பல்வேறு முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள தனது யுடியூப் பக்கத்தின் மீதான இந்த முயர்ச்சியும் மோடியின் தவறுகளை மறைத்து அவரை புனிதப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் தற்போதுள்ள வழக்கமாகி வருகிறது என்றும் குறிப்பிட்ட கணக்குகள் குறிவைக்கப்பட்டு முடக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷர்மாவின் படம் முதலில் வெளியிடப்பட்ட தருணத்தில் அதற்கு தணிக்கை குழு சான்றிதல் தர மறுத்தது. இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதல் வழங்கியது.

இந்தப்படம் மக்களை வெகுவாக சென்றடைய வேண்டும் என்பதற்காக ஷர்மாவே தனது படத்தின் அதிகாரப்பூர்வமற்ற பிரதிகளை மக்களிடம் பரப்புமாறும் யூடியூபில் பதிவேற்றம் செய்யுமாறும் கூறியிருந்தார். 2014 இல் மோடி தனது பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஷர்மா தனது “Final Cut” படத்தில் வெளியிடாத மோடியின் வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் அடங்கிய பல்வேறு வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்தார்.

Comments are closed.