குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்த Y.C.மோடி NIA தலைவராக நியமனம்

0

குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அவருக்கு விசாரணை அறிக்கை கொடுத்த மூத்த IPS  அதிகாரி Y.C. மோடி NIA வின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2002 குஜராத் கலவரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு படையில் ஒரு அங்கமாக இருந்த இவர் குஜராத் கலவரத்தின் நரோடா காம், குல்பர்க் சொசைடி, மற்றும் நரோடா பாட்டியா கலவர வழக்குகளை விசாரித்தவர்.

மேலும் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் குழுவில் இவரும் ஒருவர். இவரது விசாரணையின் அடிப்படையில் POTA சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு 8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட 12 நபர்களை குஜராத் உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டில் குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது. ஹரேன் பாண்ட்யா கொலையின் பல கேள்விகளுக்கு இவரது விசாரணை சரியான பதில்களை தரவில்லை. இந்த கொலை குறித்து நீதிமன்றம், பாண்ட்யா அவரது வாகனத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பார் என்றால் அவரது வாகனத்தில் பெருமளவு ரத்தக் கரைகள் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் அவரது வாகனத்திலோ ரத்த கரைகள் மிக மிக குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக அவரது உடைகளில் பெருமளவு ரத்தம் வெளியேறியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பாண்ட்யா அவரது வாகனத்தில் வைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றால் வாகனத்தில் ரத்தக்கறைகள் இல்லாதது ஏன் என்பது முதலிய கேள்விகளை எழுப்பியது.

மேலும் ஹரேன் பாண்டாவின் குடும்பத்தினர் CBI இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் ஹரேன் பாண்ட்யா 2002 கலவரத்திற்கு பழிதீர்க்கும் விதத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற சிபிஐ யின் கூற்றை அவரது மனைவி ஜாக்ருதி பாண்ட்யா ஏற்க மறுத்து இந்த வழக்கில் மறு விசாரணை வேண்டும் என்று மனு அளித்தார். இந்த கொலை நடைபெற்று 15  வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த சிபிஐ குழுவிற்கு தலைவராக Y.C.மோடியின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்ட பின்னரும் ஹரேன் பாண்ட்யா கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.

இவர் இந்த வழக்குகளில் மோடி ஆதரவு நிலைபாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு NIA  தலைமை அதிகாரியாக பதவி வழங்கியிருப்பது பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த பதவியில் இருந்த சரத்  குமார் மோடி அரசினால் இரண்டு முறை பதவி நீட்டிப்பு பெற்றவர்.  இவரது காலத்தில் தான் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் குற்றமற்றவர் என்றும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந் குற்றமற்றவர் என்றும் NIA அறிக்கை கொடுத்தது.

தற்போது கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பண உதவி வழங்கும் வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது, இது தொடர்பாக பிரிவினைவாத தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவரது பதிவி நியமனத்தை நியமனக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி இந்த பொறுப்பை ஏற்க இருக்கும் YC.மோடி அவரது ஓய்வுக் காலமான 2021 மே 31 ஆம் தேதிவரை இந்த பணியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது சிபிஐ இன் சிறப்பு இயக்குனராக பணியாற்றும் இவர் 1984 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மேகாலயா பிரிவு IPS அதிகாரியாவார்.

Comments are closed.