குஜராத் கலவர வழக்கு: 9 பேர் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பு

0

2002 குஜராத் கலவரத்தின் போது விராம்கம் நகரில் வசித்து வந்த முஸ்லிம்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த கொலையில் தொடர்புடைய இருவர் மீதான கொலை குற்றத்தினை விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. மேலும் அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் சிறிய அளவிலான குற்றங்கள் புரிந்தவர்கள் என்றும் இன்னும் நான்கு பேர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறியும் தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்து இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹர்ஷ் தேவானி மற்றும் பைரன் வைஷ்ணவ் அடங்கிய பென்ச் கடந்த திங்கள் கிழமை தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பில் ஏற்கனவே கொலைக்குற்றவாளிகள் என்று இருவருக்கு அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பை உறுதி செய்ததோடு மேலும் 7 பேர் கொலைக் குற்றவாளிகள் என்று கூறி தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜூலை மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Comments are closed.