குஜராத் தேர்தல்: முதற்கட்ட சோதனையில் 3550 கோளாறுள்ள வாக்கு எந்திரங்கள் கண்டுபிடிப்பு

0

குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் அங்குள்ள 182 சட்டமன்ற தொகுதிகளிலும் முதன் முறையாக VVPAT எனப்படும் வாக்கு சீட்டு மூலம் வாக்குகளை சரிபார்க்கும் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் நடத்திய முதற்கட்ட சோதனையில் சுமார் 3550 VVPAT வாக்கு எந்திரங்கள் பிரச்சனைக்குரியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான வாக்கு எந்திரங்கள் குஜராத்தின் ஜாம்நகர், தேவ்பூமி த்வர்கா மற்றும் பதான் மாவட்டங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தம் 70182 VVPAT எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் 46,000 எந்திரங்கள் பெங்களூரின் BEL நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தின் ECIL நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொண்டுவரப்பட்ட புத்தம் புதிய எந்திரங்கள். மீதம் உள்ள எந்திரங்கள் பஞ்சாப், உத்தர் பிரதேஷ், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ் நாடு, ஜார்கண்ட், ஹரியானா, கோவா, மற்றும் கர்நாடகாவில் இருந்து பெறப்பட்டவை. இந்த தேர்தல் டிசெம்பர் 9 மற்றும் 14 என்று இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த பழுதடைந்த/கோளாறான எந்திரங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி B.B.ஸ்வைன் கூறுகையில், “குறைபாடுள்ள எந்திரங்கள் மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். சில எந்திரங்களில் மீண்டும் சரி செய்யப்படும் அளவிலான சிறிய பழுதுகளே உள்ளன.” என்று அவர் கூறியுள்ளார். இந்த எந்திரங்களில் உள்ள பழுதுகள் குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு மூத்த தேர்தல் அதிகாரி, இந்த எந்திரங்களில், சரியாக வேலை செய்யாத சென்சார்கள், உடைந்த பிளாஸ்டிக் பாகங்கள், மற்றும் வாக்கு பதிவு எந்திரங்களுடன் உள்ள இணைப்பில் கோளாறு என்பன போன்ற பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பழுதான எந்திரங்களில் ராம்நகரில் 26 சதவிகிதமும், தேவ்பூமியில் 20 சதவிகிதமும் பதான் மாவட்டத்தின் 19  சதவிகிதம் எந்திரங்களும் பழுதடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மேலும் 4150 புதிய எந்திரங்களை தேர்தலுக்காக கோரியிருப்பதாகவும் பழுதடைந்த எந்திரங்களுக்கு மாற்று போக மீதம் கொஞ்சம் எந்திரங்களை  அவசர தேவைக்கு என வைத்திருக்க முடிவு செய்திருப்பதாக தேர்தல் அதிகாரி ஸ்வைன் தெரிவித்துள்ளார். இந்த்த சோதனையில் VVPAT எந்திரங்களுடன் 5245 கண்ட்ரோல் யூனிட்கள், 2907 வாக்கு பதிவு எந்திரங்கள் ஆகியனவும் குறைபாடுள்ளதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.