குஜராத் நகராட்சி தேர்தல்: லட்சக்கணக்கான முஸ்லிம் / படேல் இனத்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.

0

23 நவம்பர் அன்று குஜராத்தில் அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட், பாவ்நகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய ஆறு நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் லட்சகணக்கான இஸ்லாமிய மற்றும் படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளனர்.

அகமதாபாத்தில் மட்டுமே கிட்டத்தட்ட நாலு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் படேல் சமூகத்தார் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. குஜராத் மாநில தேர்தல் ஆணையமே தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் 2.5 லட்சத்திற்கும் மேலானோரின் பெயர்களில் சிகப்பு மையால் “நீக்கப்பட்டது” என்று வாக்காளர் பெயர் பட்டியலில் அச்சிடப்படிருந்ததாக கூறியுள்ளது.

குஜராத்தின் முஸ்லீம்கள் எப்போதுமே காகிரசுக்கு வாக்களிப்பவர்கள், தற்பொழுது படேல் சமூகத்தாரும் பா.ஜ.க. வுக்கு எதிராக திரும்பியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க விற்கு பக்கபலமே படேல் சமூகத்தினர் தான். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சிங் சோளங்கி பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த முறைகேடு குறித்து சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய பின் குஜராத் தேர்தல் ஆணையம் தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் சோளங்கி கூறுகையில், ” பா.ஜ.க.விற்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செய்த முறைகேடு இது என்றும், அது பா.ஜ.க வின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க தாங்கள் நிச்சயமாக தோர்கடிக்கப்படுவோம் என்று அறிந்திருந்ததனால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு தவறு நடப்பது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
அதன் பின் போட்டியாளர்களிடம் கொடுக்கப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலில் யார் யார் பெயர் இருகின்றதோ அவர்களின் பெயர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையில் உள்ள பெயர் பட்டியலில் அழிக்கப்பட்டதாக அச்சிடப்பட்டாலும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு வாக்கு பதிவு முடிவதற்கு ஒன்னரை மணி நேரத்திற்கு முன்பாக செல்ஃபோன் மூலமாக கொடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலானோர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

நாடு முழுவதும் நிலவி வரும் பா.ஜ.க விற்கு எதிரான அதிருப்தி அலைகள் குஜராத்தில் நடந்த இந்த தேர்தலிலும் பிரதிபலிக்கும். மோடியின் குஜராத் என்று பெருமை பேசிகொண்டிருந்த இடத்திலேயே தோல்வியடைந்தால் அது பா.ஜ.க விற்கு பெரிய நெருக்கடிகளை கொடுக்கும். நகராட்சி தேர்தல்களிலேயே இப்படி என்றால் மற்ற தேர்தல்களில் எப்படியோ?

Comments are closed.