குஜராத் பாஜக வேட்பாளர்: 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் குற்றவாளி

0

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் பாரத்சிங் சோலங்கிக்கு எதிராக ஆனந்த் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு 54 வயதான மிதேஷ் பட்டேலுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. அவருக்கு எதிராக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பல் கலவரத்தில் குற்ற வழக்கு உள்ளது.

பட்டேலின் வாக்கு மூலத்தின்படி, 2002 இல் கலவரத்தில் ஈடுபட்டதற்காக வாசட் காவல் நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். குஜராத் உயர்நீதி மன்றத்தில் 2011 ஆம் ஆண்டு குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

ஐபிசி பிரிவு 147 கலவரத்திற்கான தண்டனை, 149 கொடூரமான ஆயுதங்கங்கள் வைப்பு, 436 வெடிப்புத்திறன் கொண்ட பொருள் உபயோகிப்பு, 332 தன்னிச்சையாக தனது கடமையைச் செய்ய பொது ஊழியர் தடுப்பு, 337 ஆபத்து விளைவிப்பு, 143 சட்டவிரோதம், 380 திருட்டு ஆகிய பிரிவுகளுக் கீழ் வழக்கு உள்ளது.

பட்டேல், தனது சொந்த ஊர் வசாட்டில், முதல் பெரிய தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் பாஜகவின் ஆனந்த் மாவட்ட பொருளாளர் ஆவார். அவர் லக்ஷ்மி புரோட்டீன் புரொடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆவார்.

அவர் குஜராத் டால் உட்படக் மண்டல் மற்றும் மாநில பல்ஸ் மற்றும் ஏற்றுமதி உற்பத்தி சங்கத்தின் மாநில பிரதிநிதி.  குஜராத் மாநில பா.ஜ.க.வின் முன்னாள் குழு உறுப்பினர் ஆவார்.

மேலும், சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தின் அரசாங்கம் பரிந்துரைக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினரும் ஆவார்.

Comments are closed.