குஜராத் பா.ஜ.க தலைவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு

0

குஜராத் பா.ஜ.க தலைவரும் வடோதரா பருள் பல்கலைகழக நிர்வாகியுமான ஜயேஷ் படேல்(66) மீது 22 வயது மாணவியை கற்பழித்த குற்றத்திற்காக சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜயேஷ் படேலின் பெண்கள் கல்லூரி தலைவர் பாவனா படேல் மீதும் இந்த குற்றத்தில் துணை புரிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தற்பொழுது தலைமறைவாக உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, அவரை பாவனா படேல் கல்லூரி விடுதியின் அருகே உள்ள ஜயேஷ் படேலின் வீட்டிற்கு வெள்ளிகிழமை அழைத்துச் சென்றதாகவும் அன்று இரவு ஜயேஷ் படேல் தன்னை கற்பழித்ததாகவும் மேலும் அங்கு நடந்தவற்றை வெளியே கூறினால் அவரை கல்லூரியில் இருந்து வெளியேற்றி விடுவதாக மிரட்டினார் என்றும் கூறியுள்ளார்.

ஜூன் 17 தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவல்களை பதிவு செய்துள்ள அப்பெண், தனது நண்பர் கொடுத்த தயிரியத்தின் பெயரிலேயே தான் இந்த புகாரளித்ததாக கூறியுள்ளார்.
ஜயேஷ் படேல் மீது இந்திய குற்றப்பிரிவு 376, 323, 506, மற்றும் 114 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று வகோடியா பகுதி காவல்துறை அதிகாரி எஸ்.ஜி.வகேலா தெரிவித்துள்ளார்.

Comments are closed.