குஜராத்: வதோதராவில் தொடரும் பதற்றம்

0

குஜராத் மாநிலம் வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சர்வேஷ்வர் மஹாதேவ் கோயிலில் உள்ள சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கு காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்கிழமை இரவு பந்த்வாடா பகுதியில் முஸ்லிம்களின் வீடு ஒன்று தீ வைக்கப்பட்டது. காவல்துறையினர் உரிய நேரத்தில் வந்ததால் மசூர் பதானும் அவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். வீட்டு பொருட்களை கலவர கும்பல் சேதப்படுத்தியதாக தெரிவித்த அவர் மனைவி, கலவர கும்பலில் தங்களின் பகுதியை சேர்ந்தவர்களும் இருந்ததாக தெரிவித்தார். 40 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை காலிசெய்து விட்டு தற்போது வாடகை வீட்டிற்கு செல்வதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் பதானின் வீடு மட்டும்தான் முஸ்லிம் வீடு.எனவே வீட்டை காலி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். ‘இது சம்பந்தமாக பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்ற போதும் இந்தளவிற்கு செல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்துகள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துகளில் வீடுகளையும் தாங்கள் பாதுகாத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.