குஜராத் 20000 கோடி ரூபாய் ஊழலும், மின்னணு வாக்கு எந்திர மோசடியும்

0

சமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேச மாநில தேர்தல், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநில தேர்தல்கள் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மக்கள் முன் நிறுத்தியுள்ளது. ஒன்று எரிவாயு ஊழல், மற்றொன்று மின்னணு வாக்கு எந்திர மோசடி.

குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவிவகித்த காலத்தில் குஜராத் மாநில எரிவாயுத்துறை (Gujrat State Petroleum Corporation Ltd:GSPC) க்கு சுமார் 20000 கோடி ரூபாய் இழப்பீடு ஏறப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதனை மோடி மற்றும் அவரது ஆதரவு நிறவனங்கள் நடத்திய மிகப்பெரிய ஊழல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குஜராத் கேஸ் ஊழலில் மிகப்பெரிய பயனாளி Geo Global Resources என்கிற நிறுவனம் என்று கூறப்படுகிறது.

மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைப்படி GSPCமற்றும் Geo-Global Resources நிறுவனம்  நடத்திய எரிவாயு ஆய்வுப்பணி சுமார் 20000 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாது சரியான எண்ணெய் உற்பத்தியும் பெற்றுத் தரவில்லை. இந்த பணிக்கு எந்தவித வெளிப்படையான ஏலம் எதுவும் விடப்படாமல் Geo Global Resources நிறுவனம் மறைமுகமாக இதில் ஆய்வு பங்காளராக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு GSPC இல் 10% பங்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு முன் அனுபவம் ஏதும் இல்லாத, முன்னர் சமூக வலைதள வெளியீட்டு பணிகளை செய்துவந்த, தங்களை இந்த பணியில் இதுவரை நிரூபித்திராத நிறுவனத்தை இப்பணிக்கு அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்த ONGC க்கு பகரமாக எந்த அடிப்படையில் குஜராத் அரசால் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த GEO-GLOBAL RESOURCES நிறுவனத்தை ஒரு மோசடி நிறுவனம் என்றும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஆய்வுப்பணி என்ற போர்வையில் ஊழல் செய்ய கருவியாக இந்த நிறுவனம் பயன்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நடப்பில் உள்ள முறைகளுக்கு எதிராக GEO-GLOBAL நிறுவனத்தின் CEO ரகசியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மத்திய தணிக்கை குழுவின் அறிக்கயை சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், “மக்கள் வரிப்பணத்தில் இருந்து 1734.60 கோடி ரூபாய்களை GEO-GLOBAL RESOURCES நிறுவனத்தின் பேரில் முதலீடு செய்து ஒரு ரூபாய் கூட திரும்பப் பெறாமல் போனதில் இருந்து மோசமான முதலாளித்துவத்தின் புதிய உச்சத்தை குஜராத் அரசு எட்டியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த GEO-GLOBAL RESOURCES நிறுவனம் ஏற்ப்படுத்திய மொத்த நஷ்டத்தை சரி செய்யும் பனி ONGC யிடம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாஜக வின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சர்ச்சை கருத்துக்களுக்கு சொந்தக்காரரான சம்பித் பத்ரா ONGC யின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

GEO-GLOBAL RESOURCES (India) நிறுவனம் குறித்து jantakareporter செய்தித் தளம் நடத்திய ஆய்வில் இந்நிறுவனம் பார்படாஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் தாய் நிறுவனமான Geo-Global Resources Inc இன் தலைமையகம் கனடாவில் உள்ள கல்காரியில் அமைந்துள்ளது.  இன்னும் இந்த நிறுவனம் Key Capital Corp  என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த Key Corp நிறுவனத்தின் உரிம முறை இந்தியாவில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு எந்திரத்தில் பயன்படுத்தும் சிப் உற்பத்தியாளரான Microchip Inc நிறுவனத்தின் உரிமை முறையும் ஒரே மாதிரியுள்ளது என்று Jantakareporter கண்டறிந்துள்ளது.

அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய மின்னணு வாக்கு எந்திரங்களில் பயன்படுத்தும் மைக்ரோ சிப்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் MIcrochip Inc, USA நிறுவனமும் ஒன்று என்று தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் வெளிநாட்டுவாழ் கோடீஸ்வரரான ஸ்டீவ் சங்கி என்பவரால் தலைமை தாங்கப்படுகிறது. இவர் ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் மற்றும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் தனது Electronic and communication படிப்பை முடித்தவர். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் Chief Operating Officer மற்றொரு வெளிநாடுவாழ் இந்தியரான கணேஷ் மூர்த்தி. இவர் பாம்பே பல்கலைகழகத்தில் இயற்பியலில் B.sc பட்டம் பெற்றவர்.  இந்த Microchip நிறுவனம் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சிப்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருளையும் வடிவமைத்து அவற்றை யாரும் திறந்து சோதிக்க முடியாதவாறு பூட்டியும் வைக்கிறது. இந்த மென்பொருளை இந்திய தேர்தல் ஆணையமோ அல்லது மின்னணு வாக்கு எந்திரங்களை உற்பத்தி செய்யும் ECIL நிறுவனமோ அல்லது BHEL நிறுவனமோ கூட திறந்து பார்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் NASDAQ தளத்தில் இந்த இரு நிறுவனங்களையும் ஆய்வு செய்ததில் இந்நிறுவனங்களின் உரிம முறையில் பல ஒற்றுமைகளை காண முடிகிறது என்று Jantakareporter தெரிவிக்கிறது. இதன் அடிப்படியில் உருவாகும் கணிப்பு உண்மையென்றால் இந்த ஜனநாயகத்தையே பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகிறது என்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம் என்பது தெரியவருகிறது.

Geo-global resources நிறுவத்தின் தாய் நிறுவனம் Key Capital Group. இந்நிறுவனத்தின் உரிம முறைகளின்படி இதன் உரிமையாளர்கள் தான் “The Microchip Inc” நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கணிக்க முடிகிறது. அப்படியென்றால் GSPC ஊழலில் பெரும் லாபத்தை அடைந்தவர்கள் தான் தற்போதைய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திர சிப்களின் உற்பத்தியாளர்கள் என்ற முடிவிற்கு வர முடிகிறது. 2014 இல் இருந்து பாஜக வின் பல தொடர் வெற்றிகளுக்கான காரணம் குறித்த சந்தேகங்களுக்கும் இதன் மூலம் வலுப்பெறுகின்றன.

மின்னணு வாக்கு எந்திர சிப்களின் செயல்பாடு / முக்கியத்துவம்

பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்களில் இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன. வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாடு எந்திரம். இதில் கட்டுப்பாடு எந்திரம் தான் இந்த மின்னணு வாக்கு எந்திரத்தின் மூளை போன்றது. இதில் MCU எனப்படும் Microchip Controller அமைந்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரம் கணினியில் பயன்படுத்தும் கீ போர்ட் போன்றதே. இந்த MCU  தான் மின்னணு வாக்கு எந்திரங்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றது. பாதுகாப்பு காரணங்கள் கருதி மின்னணு வாக்கு எந்திரங்களின் ப்ரோகிராம்கள் யாரும் திரும்ப பார்க்க முடியாத வண்ணம், மாற்ற முடியாதவண்ணம் நகல் எடுக்க முடியாத வண்ணம் அமைகப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை மிகவும் நம்பகத்தன்மையுள்ள  சில BEL மற்றும் ECIL விஞ்சானிகளின் உதவியை கொண்டு வடிவமைத்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னணு வாக்கு எந்திரங்களின் மென்பொருள் மிக மிக ரகசியமானது என்று பல முறை தேர்தல் ஆணையமும் கூறி வருகின்றது. இது எத்தகைய ரகசியமானது என்றால் இந்த மென்பொருளின் நகல் தேர்தல் ஆணையத்திடம் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இப்படியிருக்க இந்த மென்பொருளை வடிமைத்த விஞ்ஞானிகளோ அல்லது BEL மற்றும் ECIL ஊழியர்களோ இந்த மென்பொருளில் மாற்றங்கள் செய்யதிருப்பார்களாயின் மொத்த மின்னணு வாக்கு எந்திரமே கேள்விக்குறியாகிவிடுகிறது.

பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டாலும் இந்த மென்பொருளை தயாரித்த விஞ்சானிகள் விலைபோக மாட்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படும் சிப்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால் Renesas japan மற்றும் Microchip Inc, USA ஆகிய நிறுவனங்கள் இந்த சிப்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அதி பாதுகாப்பாக வைக்கப்பட்ட அதி ரகசியமான, தேர்தல் ஆணையத்திடம் கூட நகல் இல்லாத அந்த மென்பொருளை இந்த சிப்களில் பதிவேற்றும் பணியை இந்த இரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது.  இதுவே தேர்தல் ஆணையம் முன் கூறிய பல பாதுகாப்பு அடுக்குளில் மிகப்பெரும் ஓட்டையை ஏற்படுத்திவிட்டது.

அரசு விளம்பரத்துறை வெளியிட்ட தேர்தல் ஆணையத்தின் கேள்விப பதில் ஒன்றில், “இந்த மென்பொருள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது, வெளிநாடுகளில் அல்ல. மேலும் தொழிற்ச்சாலை அளவில் இருந்து பல அடுக்கு பாதுகாப்பு முறைகள் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் Machine Code களாக மாற்றப்பட்டு அவை தான் சிப் உற்பத்தியாளர்களிடம் தரப்படுகின்றது. இது ஏனென்றால் இந்தியாவில் இத்தகைய சிப் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இல்லை. என்பதனால்.” என்று கூறியுள்ளது.

இந்த Mahine Code என்கிற இடத்தில் தான் தேர்தல் ஆணையம் மக்களுக்கு போலியான அறிவிப்பை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் சிப் உற்பத்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் தரப்பட்ட இந்த Machine code அந்த உற்பத்தியாளர்களால் வாசிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட முடியும் என்பதே. அப்படியென்றால் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தோதுவான முறையில் இந்த சிப் உற்பத்தியாளர்கள் அந்த குறிப்பிட்ட மென்பொருளை மாற்றியமைக்க முடியும்.

இந்த மென்பொருள் மாற்றியமைக்கப் படக்கூடிய சாத்தியக்கூறுகளாவது

* பிற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மின்னணு வாக்கு எந்திரம் அனைத்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரில் மாற்றம் செய்வது.

* வாக்களித்த பிறகு பிற வேட்பாளர்களின் வாக்குகளில் ஒரு சதவிகிதத்தை குறிப்பிட்ட ஒரு கட்சியின் வாக்குகளில் மாற்றுவது.

இந்த சிப்களை அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ள உற்பத்தியாளர்கள் பூட்டிய நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதால் தேர்தல் ஆணையத்தால் கூட அவர்கள் அந்த மென்பொருளில் ஏதேனும் மாற்றங்கள் செய்துள்ளார்களா என்று கண்டறிவது இயலாத காரியம்.

மேலும் Microchip Inc, USA நிறுவனத்தின் சங்கி மற்றும் மூர்த்தி குறித்த எந்தவித பின்னணி சோதனைகளை இதுவரை தேர்தல் ஆணையம் நடத்தியதாக எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்கு எந்திர மோசடி குறித்து பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் புகார் தெரிவித்து வருகின்ற நிலையில் தேர்தல் ஆணையத்தை விட மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையானவை என்று பாஜக தான் முன்னின்று பதிலளித்து வருகின்றது. இத்துடன் GSPC மற்றும் Microchip நிறுவன தொடர்புகள் குறித்த கணிப்புகள் இது தொடர்பான சந்தேகங்களை இன்னும் அதிகரிக்கின்றது.

Comments are closed.