குஜராத் 2002: கலவர வழக்கில் மூவர் விடுதலை

0

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற இனப்படுகொலையின் போது நடைபெற்ற கலவர வழக்குகளில் ஒன்பது வழக்குகளை சிறப்பு விசாரணை குழுமமான எஸ்.ஐ.டி. விசாரித்து வந்தது. அதில் ஒரு வழக்கான ஒடய் கிராம வழக்கில் மூவரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் சென்ற வாரம் தீர்;ப்பளித்தது.
மார்ச் 1, 2002ல் இக்கிராமத்தின் மலவ் பகோல் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் ஆயிஷ வோரா, நூரிபென் வோரா மற்றும் காதர்பாய் வோரா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அன்குர் சாபுர்பாய் படேல், மோகன் என்கிற சாஷின் ரமேஷ் படேல் மற்றும் நிகுல் ரவ்ஜி படேல் ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இவர்கள் மீது கொலை, வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஜாமீனில் வெளிவந்த இவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்னர் தப்பியோடினர். பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து அன்குரையும் இங்கிலாந்தில் இருந்து நிகுலையும் சிங்கப்பூரில் இருந்து மோகனையும் கண்டுபிடித்து விசாரணையை தொடர்ந்தனர்.
ஆனால் இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனை இவர்களுக்கு வழங்கி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏனைய பத்து நபர்களை மே 2012ல் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. இவர்களில் ஒன்பது நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதித்தது.

Comments are closed.