சந்தேக கைதுகள் தீவிரவாதத்திற்கு வழி வகுக்கிறது – தெலுங்கானா டி.ஜி.பி.

0

சமூக-பொருளாதார தளங்களில் முஸ்லிம்களை ஒதுக்குவதும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து ஆதாரமில்லாமல் இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை கைது செய்வதும் சிறுபான்மையினரிடையே தீவிரவாத போக்கை ஏற்படுத்தும் என்று தெலுங்கானா டி.ஜி.பி. அனுராக் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் குறித்து புஜ் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். “சமூக மற்றும் பொருளாதார தளங்களின் பயன்கள் முஸ்லிம்களை சரியாக சென்றடையாததினால் அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்” என்று தனது உரையில் அவர் தெரிவித்தார்.  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எவ்வாறு அடிப்படை வசதிகள் கூட இல்லாமலும் பொருளாதார வாய்ப்புகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறது என்றும் அவர் விளக்கினார்.
மேலும் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகும் ஆதாரம் ஏதும் இல்லாமல்  கைது நடவடிக்கைகள் எவ்வாறு தவறாக முடிகிறது என்பதற்கு 2007 இல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பையும் அதை தொடர்ந்து நடைபெற்ற கைதுகளையும் அவர் சுட்டிக் காட்டின்னார். நூற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்டதையும் ஆனால் விசாரணையில் அது இந்துத்துவ சக்திகள் செயல் என்பது தெளிவானதையும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.