கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்ட ரக்பர் கான் குடும்பத்தினருடன் பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைவர் சந்திப்பு

0

கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்ட ரக்பர் கான் குடும்பத்தினருடன் பாப்புலர் ஃப்ரண்ட்- தேசிய தலைவர் சந்திப்பு

டெல்லியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம், கோல்கானில் பசு பயங்கரவாதிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்ட ரக்பர் கானின் குடும்பத்தினரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ண E. அபூபக்கர் ஜூலை 25 அன்று சந்தித்தார். ஜூலை 21 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ரக்பர் கான் ஒரு பசு பயங்கரவாத கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த 11 மாதங்களில் 4 கும்பல் தாக்குதல்கள் இந்நகரத்தில் நடைபெற்றுள்ளது.

பசு பயங்கரவாதிகளுக்கு அரசு ஆதரவு அளித்து வருவதால்தான் இந்த பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து அடித்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஒரு கொடூரமான கும்பல் தாக்குதல் நடைபெற்ற பிறகும் கூட பசு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதை மறுத்து காவலில் வைத்தது இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று E. அபூபக்கர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் தேசிய தலைவருடன் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயலாளர் அப்துல் வாஹித் சேட், வடக்கு மண்டல தலைவர் A.S. இஸ்மாயில் மற்றும் உள்ளூர் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Comments are closed.