கும்பல் நீதியை நோக்கி நகரும் தேசம்?

0

கும்பல் நீதியை நோக்கி நகரும் தேசம்?

பிரபல சமூக ஆர்வலரும், ஹரியானா மாநில முன்னாள் கல்வி அமைச்சரும், பந்துவா முக்தி மோர்ச்சாவின் நிறுவனருமான சுவாமி அக்னிவேஷ் மீது இந்துத்துவாவினர் நடத்திய தாக்குதல், நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. ஜார்கண்டில் பாகூரில் ஒரு பழங்குடியின அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது பா.ஜ.க.வின் இளைஞரணியினர் மற்றும் மாணவர் அணியைச் சேர்ந்த குண்டர்கள் கடுமையாக தாக்கியதோடு, ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் குழந்தைகளை கடத்திச் செல்ல வந்தவர்கள் என்று குற்றம்சாட்டி கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றும் இளைஞரை வெறிப்பிடித்த கும்பல் ஒன்று அநியாயமாக அடித்துப்படுகொலை செய்தது. அவரது வெளிநாட்டைச் சேர்ந்த நண்பர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகாவில் அண்மையில்தான் காவல்துறையினர் முன்பாக ஒருவர் கால்நடைகளை கடத்தினார் என்று கூறி அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இத்தகைய கும்பல் படுகொலைகள் சாதாரணமாகிவிட்டன. பசு பாதுகாவலர்கள், இந்துத்துவ போராளிகள் என்று தங்களை சுயமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் சங்கபரிவார பயங்கரவாதிகள் சட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு கவலையுமில்லாமல் வெளிப்படையாகவே இத்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மோடியின் ஆட்சியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் படுகொலைகள் நாட்டில் நடந்து முடிந்துவிட்டன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களும் தலித்துகளுமாவர்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.