குரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள்

0

குரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள்

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள் அவர்களை தடுத்து விசாரித்த வனத்துறையினரை தாக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி பகுதியில் மார்ச் மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றம் சென்ற இருபதுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இறந்ததை தொடர்ந்து குரங்கணி கொழுக்கு மலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நவம்பர் 7 அன்று இப்பகுதியில் இஸ்ரேலை சேர்ந்த ஆறு நபர்கள் (3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள்) அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்ட இவர்களை வனத்துறையினர் பிடித்துச் சென்று போடி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். இஸ்ரேலை சேர்ந்தவர்கள் இந்த பகுதிக்கு எதற்காக, எப்படி வந்தார்கள் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் வனத்துறையினரின் விசாரணைக்கு இவர்கள் எந்தவித ஒத்துழைப்பையும் நல்கவில்லை. வெளிநாட்டினர் என்பதால் அவர்களின் பாஸ்போர்ட்களை வனத்துறையினர் கேட்ட போது அதனை கொடுக்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விசாரித்து கொண்டிருக்கும் போதே அவர்களை தாக்கிவிட்டு இவர்கள் அனைவரும் தப்பினர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.