குர்ஆனியச் சிந்தனை: நீங்க பனைமரமா? ஆலமரமா?

0

‘கொடையாளி இறைவனுக்கு, மனிதர்களுக்கு, சுவனத்துக்கு மிக நெருக்கமானவர். ஆனால், நரகத்துக்கு வெகு தூரமானவர். கஞ்சன் இறைவனுக்கு, மனிதர்களுக்கு, சுவனத்துக்கு மிக தூரமானவர். ஆனால், நரகத்துக்கு வெகு நெருக்கமானவர். வணங்கி வழிபடும் ஒரு கஞ்சனை விட, மார்க்க அறிவற்ற ஒரு கொடையாளி இறைவனுக்கு விருப்பமானவர். (திர்மிதி)

நல்வழியில் செலவிடு! எண்ணி எண்ணி வழங்காதே! ஏனெனில், இறைவனும் உனக்கு எண்ணி வழங்குவான். எதையும் வழங்காமல் மறுத்துவிடாதே! இறைவனும் உனக்கு வழங்க மறுத்து விடுவான். உன்னால் இயன்ற அளவு வழங்கு! (புகாரி 2591)

‘இன்ஃபாக்’ இறைவழிச்செலவிடல், ஓர் உலகளாவிய நியதி. ஒரு விநாடி உலகம் இந்த நியதியைக் கைவிட்டாலும் பிரபஞ்சமே நிலைகுலைந்து போகும். பிரபஞ்சத்தின் கட்டமைப்பே அதன் அனைத்துப் படைப்புகளும் ஒன்றையொன்று சார்ந்தவையாக, ஒன்றுக்கொன்று உதவிக் கொள்பவையாக இருக்கும் நிலையில் அமைந்துள்ளது.

கடலை எடுத்துக் கொள்ளுங்கள்! அது தன்னிடம் உள்ள நீரை, இன்னபிற வளங்களை பிறருக்கு வழங்குவதில் சிறிதளவும் கஞ்சத்தனம் செய்வதில்லை. கடல் நீர்தான் நீராவியாக வானுக்குப் பயணித்து, அதைக் காற்று இங்குமங்கும் கொண்டு சென்று பல்வேறு பகுதிகளில் மழையாய்ப் பொழிந்து நமது தாகம் தீர்க்கிறது; பயிர்களை முளைக்கச் செய்கிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.