குர்ஆனியச் சிந்தனை: போன்சாய் மரமல்ல; நீண்டு அகன்ற ஆலமரம்!

0

குர்ஆனியச் சிந்தனை: போன்சாய் மரமல்ல; நீண்டு அகன்ற ஆலமரம்!

-கே.ஆர்.மஹ்ளரி

இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை கத்தரிப்பதன் மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாக இருக்கும்படி, சட்டிகளில் வளர்க்கும் முறை போன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் போன் என்றால், ஆழமற்ற தட்டுகள் என்றும் சாய் என்றால் செடிகள் என்றும் கூறப்படும். நிறையப்பேர் நினைப்பதுபோல, போன்சாய் என்பது இயற்கையிலேயே குட்டியாக வளரும் மரமல்ல. அதுவும் சாதாரண மரம் போன்றதுதான். ஆனால் குட்டியாக இருக்குமாறு அது கட்டமைக்கப்படுகிறது.

வழக்கம்போல அதற்கும் தண்ணீர், காற்று, மண், சூரிய ஒளி இன்ன பிற தேவையான சத்துக்கள் தரப்படும். ஆனால், பெரிதாக வளரவிடாமல், அவ்வப்போது செதுக்கி விடப்படும் எந்த மரத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, போன்சாய் (குட்டை) மரமாக்கலாம். நம்மூர் ஆலமரம், அரசமரத்தைக் கூட இவ்வாறு வளரவிடாமல் கட்டையாக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

மனிதனின் மனம் குறுகிப்போனதன் வெளிப்பாடு; மனிதனின் வக்கிரபுத்தி; மரங்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் உரிமையை மனிதர்கள் எடுத்துக்கொண்டதன் தீயவெளிப்பாடு என்று இதை தாவரவியல் அனுதாபிகள் கூறுகின்றனர். இன்று மனிதர்கள் பலரும் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டுச் சின்னச் சின்ன தொட்டிகளில் நடப்படுகிறார்கள். ஆம், மனிதர்களும் இன்று போன்சாய் மரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.