குர்ஆனிய ஒலி

0

குர்ஆனிய ஒலி

முஸ்தபாவின் வீட்டிலிருந்து இரு வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் ராபியா என்ற பெண்மணி வசித்து வந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருடைய கணவர் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வெளிநாட்டில் பணி புரிந்தனர். அங்கேயே தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தங்கள் தாயாருக்குத் துணையாய் வீட்டில் தங்கி கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

கனிவும் அன்பும் நிரம்பிய ராபியாவை ஸாலிஹாவுக்கும் கரீமுக்கும் ரொம்பப் பிடிக்கும். அவரும் தம் பேரப் பிள்ளைகளைப் போல் இருவரையும் கொஞ்சுவார். வீட்டிற்கு அழைத்து ஏதாவது தின்பண்டத்தை அவர்களது கையில் திணித்து அனுப்புவார். தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளிலிருந்தும் தொலைக்காட்சியின் ஒலி வந்து கொண்டிருக்கும். ஆனால் இவரது வீட்டை கடக்கும்போது மட்டும் ராபியா அழகிய குரலில் குர்ஆன் ஓதும் ஒலி கேட்டபடி இருக்கும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.