குர்ஆனை இதயத்தில் இறக்கி வைப்போம்!

0

குர்ஆனை இதயத்தில் இறக்கி வைப்போம்!

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. – இதுவெ அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 39:23)

திருக்குர்ஆனை முதன் முதலில் இறைத்தூதரின் இதயமே ஏற்றுக்கொண்டது. நாம் திருக்குர்ஆனை ஓதுவதோடு அதனை பின்தொடரவும் வேண்டும். ஒரு மனிதனின் முக்கியமான உறுப்பு இதயம். குர்ஆன், அனைத்து உலகங்களையும் படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டது. நம்பிக்கைக்குரிய ரூஹுல் குத்தூஸ் (ஜிப்ரயீல்) மூலம் நபி(ஸல்) அவர்களின் இதயத்தில் இறக்கியருளப்பட்டது. ஆகையால், குர்ஆனை ஓதும்போது இதயத்தை முழுமையான ஈடுபாட்டுடன் வைத்திருந்தால் மட்டுமே குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் அனைத்து அருட்கொடைகளையும் நாம் பெறமுடியும்.

இதயம் மனித உடலில் வெறும் ஒரு சதைத் துண்டு அல்ல. மனிதனின் அனைத்துவிதமான உணர்வுகள், எண்ணங்கள், தூண்டுதல்கள், ஆசைகள், நினைவுகள், விருப்பங்கள், கவனம் ஆகியவற்றின் மையமாகும். இதயம் என்ற தோற்றப்பாட்டின் பல்வேறு உணர்வுகளை குறித்து பல இடங்களில் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

குர்ஆனோடு இருக்கும் நேரமெல்லாம் நமது இதயம் விழிப்புணர்வுடன் இருக்கிறதா என்பதை உறுதிச் செய்யவேண்டும். நமது மன நிலையைத்தான் நாவு உள்ளிட்ட உடலின் உறுப்புகள் பிரதிபலிக்கிறது என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. கண்ணாடி போன்ற தெளிவான இதயத்தோடு இம்மண்ணில் பிறக்கும் மனிதன் பாதுகாக்கப்பட்ட, பூரணமான இதயத்தோடு தனது இறைவனிடம் திரும்பவேண்டும். மனிதனின் பயணம் முழுவதும் அவனது ஒவ்வொரு காலடி தடங்களிலும் வெளிச்சமாகவும், பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கையுடனும் குர்ஆன் உறுதுணையாக இருக்கும். ஆனால், அதற்கு குர்ஆனை நமது இதயத்தில் இறக்கி வைக்க வேண்டும்.

குர்ஆன் எதனை கூறுகிறதோ அதற்கு பதிலளிக்கும் வகையில் இதயத்தை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள  வேண்டும்.

அல்லாஹ்வின் நாமங்கள் மொழியப்படுவதை கேட்கும்போது நமது இதயம் பயபக்தி, நன்றி உணர்வு, நேசம் ஆகிய உணர்வுகளால் நிரம்பவேண்டும்.அல்லாஹ்வின் தூதரைக் குறித்து வாசிக்கும்போது அவர்களை பின்பற்றுவதற்கான விருப்பம் இதயத்தில் உருவாக வேண்டும். அவர்களின் எதிரிகளின் மீது வெறுப்பு உருவாக வேண்டும். மறுமை நாளைக் குறித்து வாசிக்கும்போது இதயம் சுவர்க்கத்தைக் குறித்து பேராவல் கொள்ள வேண்டும்; நரகத்தில் ஒரு வினாடி நேரம் கூட எறியப்படுவோமோ? என்ற சிந்தனையால் உள்ளம் நடுங்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ÔÔயாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;” (அல்குர்ஆன் 2:121)க்

அல்லாஹ் கூறுகிறான்: ÔÔயாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;” (அல்குர்ஆன் 2:121)

Comments are closed.