குர்ஆன் ஓதிவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட 3 வயது சிறுமி கற்பழிப்பு! காஷ்மீரில் வெடித்தது போராட்டம்!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் உள்ள சம்பல் என்ற இடத்தில் கடந்த வியாழகிழமை மரியம் என்ற 3 வயது சிறுமி மதர்ஸாவிலிருந்து  குர்ஆன் வகுப்பு முடிந்து வீட்டுக்குச்செல்லும் சமயத்தில் மிட்டாய் கொடுத்து தனியாக அழைத்து சென்ற 20 வயது இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகில் சிறுமியை கண்டுபிடித்த பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலைக்குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜம்மு மாநிலத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.

Comments are closed.