குர்ஆன் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி!

0

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. உள்ளுக்குள் பகைமையை மறைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தோடு கலந்துறவாடிய இஸ்லாத்தின் எதிரிகள் இன்று பகிரங்கமாகவே தங்களது வெறுப்புகளை உமிழ்கின்றனர். பல துறைகளிலும் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் தோல்விகளும் பின்னடைவுகளும் எதிரிகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கிறது. தங்களுடைய உள்ளங்களில் பற்றி எரியும் துவேசம் மற்றும் வெறுப்பின் ஜுவாலைகள் வெளியே படர்ந்தாலும் பரவாயில்லை என்ற நிலைதான் இன்று உலகில் நிலவுகிறது. சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு பல நிகழ்வுகள் நமக்கு சாட்சியம் வகிக்கின்றன.

நாலா புறங்களிலிருந்தும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட சமூகம் விடுதலைக்கும் பாதுகாப்பிற்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையை காணும்போது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது: “ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”.

அப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். ‘‘வஹ்ன் என்றால் என்ன?” (அல்லாஹ்வின் தூதரே) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள். (நூல்:அபூதாவூத்)

முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அது இறைவனின் தண்டனை என்ற கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் எழும். அந்த கருத்தினை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: “ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை” (அல்குர்ஆன் 8:53)
“நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை.- எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.” (அல்குர்ஆன் 10:44)

ஆனால், இந்த கருத்து மனம் போன போக்கில் சொல்லப்படும் விளக்கம் அல்ல. மாறாக இலட்சியத்தை மறந்த ஒரு சமூகத்தின் மோசமான பின் விளைவை சுட்டிக்காட்டுபவை. தங்களுடைய வாழ்க்கை இலட்சியத்தை மறந்த எந்தவொரு சமூகமும் வெற்றியை அடைந்த வரலாறு கிடையாது. நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்:

“நீங்கள் ஈனா என்ற வியாபாரத்தில் ஈடுபட்டு (வட்டி போன்ற தந்திரமாக ஏமாற்றும் பரிவர்த்தனை), மாட்டின் வாலை பிடித்து, விவசாயத்தை கொண்டு திருப்தி அடைந்து, ஜிஹாத் செய்வதை விட்டு விட்டால் நீங்கள் உண்மையான மார்க்கத்திற்கு திரும்பும் வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்) … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.