குர்ஆன் பாடம்:சமகால ஃபிர்அவ்ன்கள்

0

சமகால ஃபிர்அவ்ன்கள் (குர்ஆன் பாடம்)

“நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும் உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம்.”(அல்குர்ஆன் 73:15)

மனிதர்களுக்கு நேர்வழியை காட்டுவதற்காக அல்லாஹ் இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை பூமியில் நியமித்தான். அல்லாஹ்வின் அரசாட்சியையும் ஏகத்துவத்தையும் மக்களுக்கு போதிப்பது, தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று மக்களுக்கு புரிய வைத்து வெற்றிகரமான வாழ்வியல் முறையை வாழ்ந்து காட்டுவது என்பதுதான் நபிமார்களின் இலட்சிய பணியாகும்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த காலக்கட்டத்தின் முக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒவ்வொரு இறைத்தூதரும் தங்கள் சமூகத்திடம் சென்றனர். இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் பாபிலோனியா மக்களிடம் செல்லும்போது அவர்கள் பல தெய்வ வழிப்பாட்டின் அடிப்படையிலான மூட நம்பிக்கைகள், அதன் விளைவாக உருவான துரோகங்களில் மூழ்கியிருந்தனர். ஷுஐப் நபி (அலை), ஹூத் நபி (அலை), ஸாலிஹ் நபி (அலை) ஆகிய நபிமார்களின் சமூகங்கள் பல தெய்வ வழிபாடுகளிலும், பொருளாதார மோசடிகளிலும் ஈடுபட்டு வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தன. லூத் நபி (அலை) அவர்களின் சமூகம் பாலியல் அராஜகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இருந்தது. மூஸா நபி (அலை) அவர்களின் சமூகம் பல தெய்வ வழிபாடு, ஏகாதிபத்தியம், அடிமைத்தனம் காரணமாக மூச்சுத்திணறியது. ஈஸா நபி (அலை) அவர்களின் சமூகத்தை மதத்தின் பெயரால் புரோகிதர்கள் சுரண்டி வாழ்ந்தனர். … <strong><span style=”color: red;”>முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener”> இங்கு செல்லவும்</a> </span></strong>

Comments are closed.