குர்ஆன் பாடம்: உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்!

0

குர்ஆன் பாடம்: உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்!

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (அல்குர்ஆன் 2:42)

தொடர்ச்சியாக நான்காயிரம் வருடங்களாக உலக மக்களின் மத்தியில் நிலைத்திருந்த ஒரு பிரச்சார சமூகம்தான் இஸ்ரவேலர்கள். ஏராளமான நபிமார்களும் வந்தார்கள், வேத நூல்களும் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டங்களிலெல்லாம் அல்லாஹ் வழங்கிய வேத நூல்கள் கட்டளையிடும் உண்மையை யாருக்கும் பயப்படாமல் பிரகடனப்படுத்தவும், அதற்காக நிலைத்து நிற்கவும் அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் தீமையின் சக்திகளுக்கு பயந்த காரணத்தால் தங்களது உலகியல் வாழ்வின் நலனுக்காக உண்மையைப் பொய்யுடன் கலந்தார்கள். உண்மையை மக்களால் பிரித்தறிய முடியாத அளவுக்கு கொள்கை குழப்பத்தை உருவாக்கினார்கள். கலப்படம் செய்து களங்கத்தை ஏற்படுத்த முடியாத இதர சில உண்மைகளை சுய நலன்களுக்காக மூடி மறைத்தார்கள். முன்னோர்களின் இந்த நிலை குர்ஆனிய சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இந்த எச்சரிக்கையை விடுக்கிறான்.

உண்மையின் நிலைகளையும், மனிதர்களின் பொதுவான குணாதிசயங்களையும், சமூக சூழலையும் ஆராயும்போது திட உறுதிகொண்ட சிறிய கூட்டத்தினரை தவிர பெரும்பாலோர் முன்னோர்களின் வழிகேட்டில் சென்று வழி தவறாமல் இருக்கமாட்டார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.