குர்ஆன் பாடம்- எதிரிகள் நண்பர்கள் அல்லர்

0

எதிரிகள் நண்பர்கள் அல்லர்

“நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். -எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.” (அல்குர்ஆன் 60:9)

நாட்டின் பெரும்பாலான மாற்று மத மக்களில் சிறியதொரு சதவீதத்தினர் மட்டுமே வன்முறை சித்தாந்தத்தை கொள்கையாக அங்கீகரித்தவர்கள். அவர்கள் முஸ்லிம்கள், இதர மதப்பிரிவினருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அச்சுறுத்தலானவர்கள். மதத்தின் பெயரால் தாக்குதலை நடத்துவது, வாழ்விடங்களை அழிப்பது, மண்ணின் மைந்தர்களை பிறந்த நாட்டில் அகதிகளாக மாற்றுவது முதலான செயல்களை புரிபவர்களும், அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அநியாயக்காரர்கள் ஆவர். அவர்களோடு நட்புறவு வைத்துக்கொள்வதையும், அவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வதையும் அல்லாஹ் விலக்கியுள்ளான். அந்த விலக்கை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அநியாயக்காரர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டை அங்கீகரிக்காதவர்கள் அநியாயக்காரர்கள் என்ற அல்லாஹ்வின் கூற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அநியாயக்காரர்களை நேசர்களாக ஆக்கிக்கொள்பவர்களும், அவர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும், அவர்களின் செயல்திட்டங்களை வெற்றி பெறுவதற்காக உதவுபவர்களும், தீமையின் அணியினருக்கு உதவுகின்றனர். அநியாயக்காரர்கள் பொது சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு உதவி செய்வதைவிட பெரிய தவறு வேறு எதுவுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரண்டு தடவை கொட்டப்படமாட்டான்”. (நூல்: புகாரி)

Comments are closed.