குர்ஆன் பாடம்: கொள்கை பலம்

0

கொள்கை பலம்

‘‘(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.”(அல்குர்ஆன்14:24,25)

கொள்கை வாக்கியத்தினால் உருவாகும் சமூக பலனை அல்லாஹ் இவ்வசனத்தில் அழகாக சித்தரித்துள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா வாக்கியம் அல்லது ஏதேனும் ஒரு அல்லாஹ்வின் வசனம் உள்ளத்தில் விதைக்கப்படுவதன் மூலம் அது முளைத்து அதனுடைய வேர்கள் ஆழமாக பதிந்து வானளாவிய கிளைகளுடன் ஒரு பலன் தரக்கூடிய மரமாக வளருகிறது. பின்னர் அது மக்களுக்கு கனிகளை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

வானளாவச் செல்லும் கிளை அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்று தலை நிமிர்ந்து நிற்கும் கண்ணியமான மனிதரை குறிப்பிடுகிறது. அதன் பக்கவாட்டில் செல்லும் கிளைகள் குடும்பம், கல்வி கலாச்சாலை, பணியிடம், நட்பு வட்டாரம், சமூகம், அரசியல் என படர்ந்து வளருகிறது. மேலும் அவற்றிலிருந்து உருவாகும் துணைக் கிளைகள் படர்ந்து செல்கிறது. மரக்கிளைகளில் பூக்கள் விரிந்து, நறுமணம் பரப்பி, காய், கனிகளை விளைவித்து உணவையும் நிழலையும் அளித்து மனிதர்களுக்கு வளமாக மாறுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.