குர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்!

0

சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்!

“பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வசதியற்றவர்கள்தாம் உங்கள் தர்மங்களுக்கு மிகவும் உரித்தானவர்கள் ஆவர். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதில் இருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.”(அல்குர்ஆன் 2:273)

‘‘கல்வி,- சமூக-போராட்ட பணிகளுடன் ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். அஸ்ஹாபுஸுஃப்ஃபா என்று அழைக்கப்படும்  அவர்கள் 300க்கும் அதிகமானவர்களாக இருந்தார்கள். வீட்டையும், நாட்டையும் துறந்து மதீனாவிற்கு வந்து நபி(ஸல்) அவர்களை வந்தடைந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் உத்தேசிக்கும் எத்தகைய நற்செயலையும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள். மதீனாவிற்கு வெளியே பணிகள் எதுவும்  இல்லையெனில் அவர்கள் மதீனாவிலேயே தங்கி இஸ்லாமிய கல்வியை கற்றதோடு, பிறருக்கும் கற்பித்தார்கள். வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு கிடையாது. இத்தகைய குழுவினரும், இதே குணாதிசயம் கொண்ட தனி நபர்களும் இந்த வசனம் குறிப்பிடும் பிரிவை சேர்ந்தவர்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.