குர்கோன் பள்ளி பேருந்து தாக்குதலை பயன்படுத்தி மததுவேஷம் ஏற்படுத்த முயன்ற மது கிஸ்வர்.

0

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்புத் கும்பல் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டது. இந்த வன்முறை சம்பவங்களுள் ஒன்றாக குர்கோனில் பள்ளி பேருந்து ஒன்று ராஜ்புத் கும்பலின் கல்லெறி தாக்குதலுக்கு உள்ளானது.

பலதரப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்பினை சம்பாதித்த இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சில இளைஞர்களை கைது செய்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மத துவேஷத்தை ஏற்படுத்த நினைத்த பாஜக வின் மது கிஸ்வர், தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்று பதிவு செய்துள்ளார்.

இவர் தனது பதிவில், “பள்ளி பேருந்து மீது பன்சாலி திரைப்படத்தை எதிர்க்கும் கர்ணி சேனா அமைப்பின் பெயரில் கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள், சதாம், ஆமிர், ஃபெரோஸ், நதீம் மற்றும் அஷ்ரஃப். இது உண்மையாக இருந்தால் இதுவே பல செய்திகளை தெரிவிக்கின்றன. கூடுதலாக எதுவும் கூறத்தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கலவரக்காடாக இருக்கும் குர்கோன் பகுதியில் இவரின் இந்த பதிவு இந்து முஸ்லிம் மோதலை ஏற்படுத்தவல்லது என்று உணர்ந்த குர்கோன் காவல்துறை அவரது பதிவிற்கு தங்களின் பதிலை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதில், “இந்தப்பதிவு ஹரியானா போக்குவரத்து பேருந்து மற்றும் பள்ளிப்பேருந்து தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களில் எவரும் முஸ்லிம்கள் இல்லை என்பதை விளக்கவே.” என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கிடைத்த சந்தர்ப்பத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த மது கிஸ்வர் முயற்சித்துள்ளார் என்று கூறி பலரும் அவரை கைது செய்ய சமூக வலைதலங்களில் வற்புறுத்தி வருன்கின்றனர். மேலும் மது கிஸ்வர் “இது உண்மையென்றால்” என்று கூறி தனது விஷக் கருத்துக்களை பரப்புவது இது முதல் முறையல்ல என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து @Hones8Liar என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மது கிஸ்வரின் இது போன்ற பல முந்தைய கருத்துகள் அடங்கிய பதிவுகளை தொகுத்து பதிவிட்டுள்ளார்.

அவற்றில் சில

Comments are closed.