குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதவர்களிடம் இருந்து 1771 கோடி ரூபாய்களை வசூலித்த SBI

0

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருபுத்தொகை வைத்திராதவர்களிடம் இருந்து சுமார் 1771 கோடி ரூபாய்களை அபராதமாக வசூலித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இது இந்த வங்கியின் இரண்டாம் காலாண்டு இலாபத் தொகையாக 1581.55 கோடிகளைக் காட்டிலும் அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லையாவிற்கு கொடுத்தது போன்ற வராக் கடன்கள் மூலமாக தங்களின் இலாபங்கள் வெகுவாக குறைந்ததை அடுத்து பொதுமக்களின் பணத்தில் கைவைக்க திட்டமிட்ட இந்த வங்கி குறைந்தபட்ச இருபுத்தொகை இல்லாத வங்கிக் கணக்கில் இருந்து அபராதத்தை விதிக்கத் தொடங்கியது.

2016-17 நிதியாண்டில் இது போன்ற அபராதத்தொகை எதுவும் விதிக்காத ஸ்டேட் வங்கி, கடந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த அபராதத்தொகையை விதிக்கத் தொடங்கியது.

மொத்தம் 42 கோடி சேமிப்புக் கணக்கு உள்ள இந்த வங்கியில் 13 கோடி அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளாகும். இந்த கணக்குகளில் இருந்து குறைந்த பட்ச இருப்புத் தொகைக்காக அபராதம் விதிக்க முடியாது. மீதமுள்ள 29 கோடி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திராத  கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையே இவை.

ஸ்டேட் வங்கியை தொடர்ந்து இந்த அபராதத் தொகை வசூலில் பஞ்சாப் தேசிய வங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது. இது இக்காலக்கட்டத்தில் சுமார் 97.34 கோடிகள் வசூல் செய்துள்ளது. இந்த வங்கியை தொடர்ந்து Central Bank of India மற்றும் கனரா வங்கி தலா 68.67 கோடிகள் மற்றும் 62.16 கோடிகள் வசூல் செய்துள்ளன. இது போன்ற அபராத தொகையை வசூலிக்காத ஒரே வங்கி பஞ்சாப் சிந்து வங்கியாகும்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஸ்டேட் வங்கி தங்களது குறைந்தபட்ச வைப்புத் தொகையை நகரங்களில் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 5000 இல் இருந்து ரூபாய் 3000 ஆக குறைத்தது. இந்நிலையில் பெருநகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு அது 50% த்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூபாய் 50தும் 50% இல் இருந்து 75% வரை குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூபாய் 100 ம் 75% அல்லது அதற்கும் குறைவான சதவிகிதம் இருக்கும் பட்சத்தில் அது 100 ரூபாயாக வசூலித்தும் வந்தது. நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூபாய் 3000 வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு அது 50% குறைவாகும் பட்சத்தில் ரூபாய் 40 தும், 50% இல் இருந்து 75% வரை ரூபாய் 60 தும், தற்கும் கூடுதலான சதவிகிதத்திற்கு ரூபாய் 80 ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையுடன் ஆண்டு பராமரிப்பு தொகை என 125 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை டெபிட் கார்டுகளுக்கு வசூல் செய்துள்ளது. மொத்தமுள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் கணக்கிடப்பட்ட வராக்கடன் தொகை ரூபாய் 7.33 லட்சம் கோடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி இதுவரை 2.28 லட்சம் கோடிகளை வராக்கடனாக கருதி பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2017, ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ரூபாய் 55356 கோடிகளை வராக்கடனாக பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 54% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.