குலாம் நபி ஆசாத்தை குறிவைக்கும் பாஜக!

0

காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியான் பகுதி மக்கள் சிலருடன் பேசியது, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “பணத்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கலாம்” என்று கூறினார்.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவிக்கையில், ”

குலாம் நபி ஆசாத்தின் கருத்து நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தானிடம் இருந்துதான் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்பார்க்க முடியும். காங்கிரஸ் கட்சியிடமிருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, ஆசாத் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சம்பித் பத்ரா தெரிவிக்கையில், “இந்தியாவில் நல்லது நடக்கும்போதெல்லாம், பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரே குரலை எதிரொலிக்கின்றன. ஒன்று பாகிஸ்தான் காங்கிரஸ் குரலை எதிரொலிக்கும், அல்லது காங்கிரஸ் பாகிஸ்தான் குரலை எதிரொலிக்கும். தற்போது இது தான் நடந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.